ADDED : பிப் 14, 2026 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலையூர்: மதுரப்பாக்கம் ஊராட்சி, கோவிலாஞ்சேரியில், தனியார் நிலத்திற்கு செல்லும் 30 அடி சாலையை ஆக்கிரமித்து, வீடு மற்றும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.
இது குறித்து, அவ்வூராட்சியில் புகார் தெரிவித்தும், சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால், பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டது.
அதன்படி, வருவாய் துறையினர், நேற்று காலை போலீஸ் பாதுகாப்புடன் சென்று, சாலை ஆக்கிரமிப்பான இரண்டு வீடுகள் மற்றும் சுற்றுச்சுவரை இடித்து அப்புறப்படுத்தினர்.

