/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமி குளிப்பதை படம் பிடித்த 'காமுகன்' போக்சோவில் கைது
/
சிறுமி குளிப்பதை படம் பிடித்த 'காமுகன்' போக்சோவில் கைது
சிறுமி குளிப்பதை படம் பிடித்த 'காமுகன்' போக்சோவில் கைது
சிறுமி குளிப்பதை படம் பிடித்த 'காமுகன்' போக்சோவில் கைது
ADDED : ஆக 18, 2025 02:46 AM
பூக்கடை:சிறுமி குளிப்பதை படம் பிடித்த, 'காமுகனை' போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
சென்னை, கொண்டித்தோப்பைச் சேர்ந்த, 17 வயது சிறுமி, தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர், தன் வீட்டின் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டின் கிரில் கேட் வழியாக, சிறுமி குளிப்பதை ஒருவர், மொபைல் போன் மூலம் படம் பிடித்துள்ளார்.
அதை பார்த்த சிறுமி, மொபைல் போனை அவரிடம் இருந்து பறித்து, தன் தாயிடம் கொடுத்து நடந்ததை கூறியுள்ளார். இது குறித்து, பூக்கடை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரித்த போலீசார், சிறுமி குளிப்பதை படம் பிடித்த ராகேஷ், 52, என்பவரை, பாலியல் வன்கொடுமை குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தில், நேற்று கைது செய்தனர்.