/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை ஆசாமிகளால் வெட்டப்பட்டவர் உயிரிழப்பு ரகளையை தட்டிக்கேட்டவருக்கு நேர்ந்த துயரம்

ADDED : மார் 09, 2024 12:22 AM

பேசின்பாலம், புளியந்தோப்பு, குமாரசாமி ராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல், 47. இவரது மனைவி, சோபா. இவர்களது வீட்டின் அருகே வசிக்கும் சிலர், தினமும் மது மற்றும் கஞ்சா போதையில் சாலையில் அரட்டை அடிப்பது வழக்கம். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
வழக்கம்போல, கடந்த வாரமும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர், சக்திவேல் வீட்டருகே சாலையில் அமர்ந்து மது அருந்தி, வம்புக்கு ரகளையில் ஈடுபட்டனர். அட்டூழியம் தாங்க முடியாமல், சக்திவேல் அவர்களை தட்டிக் கேட்டு, அங்கிருந்து கண்டித்து அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 3ம் தேதி டிமலஸ் சாலையில் டீ குடிக்க சென்ற சக்திவேலை போதை கும்பல் செய்து கத்தியால் வெட்டி உள்ளனர்.
இதில் அவரது முகம் மற்றும் தலையில் விழுந்த வெட்டில், மண்டை ஓடு பலத்த சேதமடைந்தது. அரசு பொது மருத்துவமனையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சக்திவேல், நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக பேசின்பாலம் காவல் நிலைய போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, புளியந்தோப்பைச் சேர்ந்த சுண்டு' நவீன்குமார், 20, அஜித், 21, ராஜசேகரன், 24, தேள்' விக்கி என்கிற விக்னேஸ்வரன், 23, ஆகிய நான்கு பேரை கைது செய்திருந்தனர்.
சக்திவேல் உயிரிழந்த நிலையில், கொலை வழக்காக மாற்றப்பட்டு உள்ளது.