/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாடியில் இருந்து விழுந்தவர் பலி
/
மாடியில் இருந்து விழுந்தவர் பலி
ADDED : ஜன 22, 2026 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு: மது போதையில் முதல் மாடியில் இருந்து கீழே தவறி விழுந்தவர் பலியானார்.
புளியந்தோப்பு, அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சபீர் பாஷா, 50. மனைவி பிரிந்து சென்ற நிலையில், சகோதரி பர்வீன், 50, வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் சபீர் பாஷா வீட்டின் முதல் மாடியில் இருந்து, மதுபோதையில் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதையடுத்து, பெரம்பூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.
புளியந்தோப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.

