/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நேர்மை ஓட்டுநருக்கு எம்.எல்.ஏ., பாராட்டு
/
நேர்மை ஓட்டுநருக்கு எம்.எல்.ஏ., பாராட்டு
ADDED : ஜன 22, 2026 05:09 AM
திருவொற்றியூர்: சாலையில் கிடந்த 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை கண்டெடுத்து, உரியவரிடம் கொடுக்க போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை, திருவொற்றியூர் எம்.எல்.ஏ., பாராட்டினார்.
எண்ணுார், தாழங்குப்பத்தைச் சேர்ந்தவர் தேசராணி, 35. இரு தினங்களுக்கு முன், கத்திவாக்கம் பஜாரில் உள்ள நகை கடையில், 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான, செயின் மற்றும் ஒரு ஜோடி கம்மல் உள்ளிட்ட நகைகளை வாங்கியுள்ளார். வீடு திரும்பியபோது, கத்திவாக்கம் பஜார் - ஆர்.எஸ்., சாலையில், நகை பையை தவற விட்டார்.
இதற்கிடையில், அவ்வழியே சென்ற ஆட்டோ ஓட்டுநர் வினோத்குமார், 32, என்பவர், கேட்பாரின்றி கிடந்த நகைகளை கண்டெடுத்து, உரியவரிடம் ஒப்படைக்க எண்ணுார் உதவி கமிஷனர் வீரகுமாரிடம் ஒப்படைத்தார். நகை தவறவிட்ட தேசராணியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநர் வினோத் குமாரை, திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., கே.பி.சங்கர் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

