/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நண்பர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய நபர் காரில் உயிரிழப்பு
/
நண்பர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய நபர் காரில் உயிரிழப்பு
நண்பர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய நபர் காரில் உயிரிழப்பு
நண்பர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய நபர் காரில் உயிரிழப்பு
ADDED : நவ 25, 2025 04:23 AM
கோயம்பேடு: விழுப்புரத்தில் நண்பர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று சென்னை திரும்பிய நபர், காரிலேயே உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
நெற்குன்றம், என்.டி.படேல் சாலையைச் சேர்ந்தவர் சுரேஷ், 44. இவர், கோயம்பேடு சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது கடையில் பணிபுரிந்து வரும் சந்திரசேகர் என்பவரின் மனைவிக்கு, நேற்று முன்தினம் வளைகாப்பு நடந்தது. இதற்காக, சுரேஷ் தன் காரில் எண்ணுாரைச் சேர்ந்த ராஜேஷ், 44 உள்ளிட்ட நான்கு நண்பர்களை அழைத்துக் கொண்டு விழுப்புரம் சென்றார்.
வளைகாப்பு நிகழ்ச்சி முடிந்து, அனைவரும் மது அருந்தி உள்ளனர். பின், இரவே அனைவரும் காரில் சென்னை திரும்பி உள்ள னர்.
அதீத போதையால் காரில் துாங்கியபடி ராஜேஷ் வந்துள்ளார். நேற்று அதிகாலை கோயம்பேடு சந்தைக்கு கார் வந்தவுடன் காரில் வந்தவர்கள் இறங்கிய நிலையில், ராஜேஷ் மட்டும் இறங்காமல் இருந்தார்.
நீண்ட நேரம் தட்டியும் எழுந்திருக்காததால், '108' ஆம்புலன்ஸ் வரவழைத்து சோதனை செய்தபோது, அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
தக வல் அறிந்து வந்த கோயம்பேடு போலீசார், உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதீத மது போதையில் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

