/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பைக் 'வாட்டர் வாஷ்' செய்தவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
/
பைக் 'வாட்டர் வாஷ்' செய்தவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
பைக் 'வாட்டர் வாஷ்' செய்தவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
பைக் 'வாட்டர் வாஷ்' செய்தவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
ADDED : மே 31, 2025 03:05 AM
புளியந்தோப்பு:புளியந்தோப்பு, குட்டி தம்பிரான் தெரு பகுதியைச் சேர்ந்தவர் தவுசிப்கான், 30. இவர், ராமசாமி தெருவில் பைக் வாட்டர் வாஷ் கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று மதியம் தொழுகை முடித்து, நண்பரின் பைக்கை வாட்டர் வாஷ் செய்வதற்காக, பிற்பகல் 3:00 மணியளவில் கடைக்கு வந்துள்ளார். மேட்டார் 'சுவிட்ச் ஆன்' செய்தபோது, திடீரென மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே தவுசிப்கான் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதில் தவுசிப்கான் இறந்தது தெரிய வந்தது. இது குறித்து புளியந்தோப்பு போலீசார் விசாரிக்கின்றனர். இறந்த தவுசிப்கானுக்கு திருமணமாகி இரண்டு வயதில் ஒரு மகள் உள்ளார்.