/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓட்டுநர்களுக்கு இடையே தகராறில் காயமடைந்தவர் பலி
/
ஓட்டுநர்களுக்கு இடையே தகராறில் காயமடைந்தவர் பலி
ADDED : ஆக 25, 2025 01:32 AM
மடிப்பாக்கம்; மடிப்பாக்கம் அருகே, ஓட்டுநர்களி டையே ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டவர் உயிரிழந்தார்.
கேரளாவைச் சேர்ந்த அசாருதீன்ஷா, 38. இவர், உறவினர்களான ஹாஜா மைதின், 31, சமீர், 30, ஆகியோருடன் எஸ் கொளத்துாரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் தங்கி இருந்தார். மூவரும் தனியார் 'டிராவல்ஸ்' நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தனர்.
இவர்கள், கடந்த 18ம் தேதி மதியம் சிக்கன் சமைத்த பின், போதையில் படுத்துள்ளனர். அசாருதீன்ஷா மாலை துாங்கி எழுந்து சாப்பிட சென்றபோது, சாப்பாடு குறைவாக இருந்துள்ளது.
இது குறித்து கேட்கவே, மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சமீர் மற்றும் ஹாஜாமைதீன் சேர்ந்து அசாருதீன்ஷாவை தாக்கி உள்ளனர். இந்த நிலையில், 20ம் தேதி வயிறு வலி என, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அசாருதீன்ஷா சென்று வந்துள்ளார். இரவு மீண்டும் வயிறு வலி ஏற்படவே, மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு 21ம் தேதி இறந்தார்.
பிரேத பரிசோதனை அறிக்கையில், வயிற்றில் ஏற்பட்ட காயத்தால் இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து, மடிப்பாக்கம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, ஹாஜாமைதீனை கைது செய்து, சிறையில் அடைத்தனர். சமீரை தேடி வருகின்றனர்.

