/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அதிகாரி குறித்து அவதுாறு பரப்பிய நபருக்கு சிறை
/
அதிகாரி குறித்து அவதுாறு பரப்பிய நபருக்கு சிறை
ADDED : நவ 03, 2025 02:23 AM
சென்னை: போலீஸ் அதிகாரி குறித்து, அவதுாறு பரப்பிய நபருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007 - 2008ம் ஆண்டில், பூக்கடை காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் அகஸ்டின் பால் சுதாகர். தற்போது சென்னை மாநகர போலீசில், கூடுதல் துணை கமிஷனராக உள்ளார்.
இவர் மீது, சிராஜுதீன், நகைமுகன் ஆகியோர், சில குற்றச்சாட்டுகளை சுமத்தி, கட்டுரை வெளியிட்டனர்.
இவர்கள் மீது, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில், அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால், சிராஜுதீனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையில் இருந்தபோதே, 2016ல் நகைமுகன் இறந்துவிட்டார்.

