ADDED : நவ 26, 2026 08:34 PM
அ நிறம் | அளவு
யானைகவுனி: கூவம் ஆற்றில் அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய, 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை, போலீசார் மீட்டனர்.
யானைக்கவுனி, கல்யாணபுரம் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம், இன்று (நவ.,26) கரை ஒதுங்கி உள்ளது.
இதை பார்த்த பகுதி மக்கள், யானைக்கவுனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி, 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் என, தெரியவந்தது.
இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த நபரின் விபரம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
