/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
21 ஆண்டுகள் போலீசுக்கு 'தண்ணி' காட்டியவர் கைது
/
21 ஆண்டுகள் போலீசுக்கு 'தண்ணி' காட்டியவர் கைது
ADDED : ஆக 13, 2025 04:02 AM

சென்னை, ஆக. 13-
கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல், போலீசாருக்கு 21 ஆண்டுகள் 'தண்ணி' காட்டி வந்தவர் கைது செய்யப்பட்டார்.
திருவொற்றியூரில், 2004ம் ஆண்டு நடந்த பிலால் ரவி என்பவர் கொலை வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த மாடு ரமேஷ் கைது செய்யப்பட்டார்.
ஜாமினில் வெளி வந்தபின், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல், 21 ஆண்டுகளாக போலீசாருக்கு 'தண்ணி' காட்டி வந்துள்ளார். இதனால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
அதிதீவிர குற்றத் தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணையில், மாடு ரமேஷ், திருவள்ளூர் மணவாளநகர், தாம்பரம், திருவல்லிக்கேணி என, பல இடங்களுக்கு மாறிச் சென்றது தெரியவந்தது. இந்நிலையில், புதுப்பேட்டை கோமலீஸ்வரன் பேட்டை போலீஸ் பூத் அருகே, வலது காலில் வெட்டுக்காய தழும்புடன், மர்ம நபர் போதையில் துாங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில், அவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் மாடு ரமேஷ், 53, என்பது தெரியவந்தது.
இவர், துவக்க காலத்தில் மாடு திருடி வந்ததால், பெயருக்கு முன் மாடு என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுவதும் தெரிய வந்தது. இவரை கைது செய்து, திருவொற்றியூர் போலீசாரிடம் நேற்று ஒப்படைத்துள்ளனர்.