/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமியிடம் அத்துமீறிய நபருக்கு 'ஆயுள்'
/
சிறுமியிடம் அத்துமீறிய நபருக்கு 'ஆயுள்'
ADDED : பிப் 02, 2025 12:51 AM

செங்கல்பட்டு,குன்றத்துார் பகுதியைச் சேர்ந்த அபுபக்கர் என்ற அறிவழகன், 36, என்பவர், மூன்றரை வயது சிறுமியை, 2019 ஏப்ரல் 13ம் தேதி, பாலியல் வன்கொடுமை செய்தார்.
சிறுமியின் தாய், பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், அறிவழகனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமா பானு முன்னிலையில் நடந்தது.
விசாரணை முடிந்து குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அறிவழகனுக்கு ஆயுள் தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
அதன்பின், அறிவழகனுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.