/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாலை வாங்க சென்றவர் ரயிலில் அடிபட்டு பலி
/
மாலை வாங்க சென்றவர் ரயிலில் அடிபட்டு பலி
ADDED : ஜன 23, 2025 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடி அடுத்த கோவில் பதாகை, திருமுல்லைவாயில் சாலையைச் சேர்ந்தவர் விக்னேஷ், 30; திருமணம் ஆகாதவர். இவர், வேலைக்கு செல்லாமல், ஆன்மிகம் மீது நாட்டம் கொண்டு கோவில் கோவிலாக சுற்றி வந்துள்ளார். நேற்று மாலை, உறவினர் ஒருவரின் இறப்பிற்கு மாலை வாங்க ஆவடிக்கு வந்துள்ளார்.
அப்போது, சென்னையில் இருந்து கோவை சென்ற இன்டர்சிட்டி விரைவு ரயிலில் அடிபட்டு, பரிதாபமாக உயிரிழந்தார். ஆவடி ரயில்வே போலீசார், உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.