/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
85 ' ஐ - போன் ' திருடிய மேலாளர் கைது
/
85 ' ஐ - போன் ' திருடிய மேலாளர் கைது
ADDED : ஆக 09, 2025 12:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரவாயல்,போரூர், ஆற்காடு சாலையில், வீட்டு பொருட் கள் விற்கும் 'கிரியாஸ்' கடை உள்ளது. இந்த கடையில் பிப்., 22 முதல் மார்ச் 27ம் தேதி வரை, 62.75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 85 ஐ - போன்கள் கணக்கில் வரவு வைக்காமல், முறை கேடாக விற்பனை செய்திருப்பது தெரிந்தது.
கிளை மேலாளரான கோவில்ராஜ், 31, என்பவர், கையாடல் செய்திருப்பதும் தெரிந்தது. மொபைல் போன்களுக்கான பணத்தை 40 நாட்களுக்குள் தரவேண்டும் என, கடை நிர்வாகம் எச்சரித்தது.
ஆனால் திடீரென தலைமறைவானதால், மதுரவாயல் போலீசார் விசாரித்து, துாத்துக் குடியில் கோவில்ராஜை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.

