/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வரசித்தி வல்லப மஹா கணபதி கோவிலில் மங்கள சண்டி யாகம்
/
வரசித்தி வல்லப மஹா கணபதி கோவிலில் மங்கள சண்டி யாகம்
வரசித்தி வல்லப மஹா கணபதி கோவிலில் மங்கள சண்டி யாகம்
வரசித்தி வல்லப மஹா கணபதி கோவிலில் மங்கள சண்டி யாகம்
ADDED : ஜன 07, 2025 12:33 AM
சென்னை, உலக நன்மை கருதி, பெசன்ட் நகர் ஸ்ரீ வரசித்தி வல்லப மஹா கணபதி கோவிலில், ஜன., 1 முதல் 10ம் தேதி வரை, ஸ்ரீ மங்கள சண்டி மஹா யாக பெருவிழா நடக்கிறது.
சகல செல்வம் பெற, திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நிறைவேற, குடும்ப ஒற்றுமைக்காக, வாழ்வில் துன்பம் நீங்க, கடன் தொல்லைகள் போக்க, வியாபாரம் பெருக என, அனைத்து நன்மைகளையும் பெறவல்ல, ஸ்ரீ சண்டி மஹா யாகம், சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஸ்ரீ வரசித்தி வல்லப மஹா கணபதி கோவிலில், கடந்த ஜன., 1ம் தேதி துவங்கியது. இந்த மஹா யாகம், 10ம் தேதி நிறைவடைகிறது.
புதுக்கோட்டை, ஸ்ரீ புவனேஸ்வரி பீடத்தின் ஸ்ரீ பிரணவாந்த மஹா சுவாமிகள் முன்னிலையில், தினமும் மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை இந்த யாகம் நடக்கிறது.
மேலும் விபரங்களுக்கு, 94439 58586 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.