/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பி.சி.ராய் கோப்பை கால்பந்து மணிப்பூர் அணி சாம்பியன்
/
பி.சி.ராய் கோப்பை கால்பந்து மணிப்பூர் அணி சாம்பியன்
பி.சி.ராய் கோப்பை கால்பந்து மணிப்பூர் அணி சாம்பியன்
பி.சி.ராய் கோப்பை கால்பந்து மணிப்பூர் அணி சாம்பியன்
ADDED : ஆக 03, 2025 12:15 AM
சென்னை,தேசிய அளவில் நடக்கும் பி.சி.ராய் கோப்பைக்கான கால்பந்து போட்டியில், மணிப்பூர் அணி, 3 - 0 என்ற கோல் கணக்கில், நடப்பு சாம்பியனான மேற்கு வங்க அணியை வீழ்த்தி, சாம்பியன் ஆனது.
அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், தேசிய அளவில் ஜூனியர் வீரர் களுக்கு, 'பி.சி. ராய் கோப்பை 2025 - 26' கால்பந்து போட்டி, பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தரசஸ் நகரில் நடந்து வருகிறது.
இதன் இறுதி போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதில், மேற்கு வங்கம், மணிப்பூர் அணிகள் மோதின. சிறப்பாக விளையாடிய மணிப்பூர் அணி 3 - 0 என்ற கோல் கணக்கில், நடப்பு சாம்பியனான மேற்கு வங்க அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
மணிப்பூர் அணி சார்பில், லுாரெம்பம் நவுச்சா சிங் 17வது நிமிடத்திலும், காயுங்மி கஷுங் 37வது நிமிடத்திலும், அமோம் கிரிஷ் சிங் 92வது நிமிடத்திலும், தலா ஒரு கோல் அடித்து அசத்தினார்.
தமிழக அணி ஏமாற்றம் இந்த தொடரின் முதல் சுற்றில், இரண்டாவது பிரிவில் தமிழக அணி விளையாடியது. லீக் சுற்றில் சிறப்பாக விளையாடினாலும், அந்த பிரிவில் அதிக புள்ளிகள் பெற்ற மேற்கு வங்க அணி, அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
தமிழக அணி விளையாடிய மூன்று போட்டிகளில், ஒன்றில் வெற்றி; ஒன்றில் தோல்வி; ஒன்றில் டிரா என, கேரளா அணியோடு இரண்டாம் இடத்தில் உள்ளது.