/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மத்திய அரசு பள்ளியில் மாரத்தான் போட்டி
/
மத்திய அரசு பள்ளியில் மாரத்தான் போட்டி
ADDED : ஜூன் 23, 2025 01:32 AM
ஆவடி:ஆவடி எச்.வி.எப்., எஸ்டேட் பகுதியில், மத்திய அரசின் விஜயந்தா சீனியர் செகண்டரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் 50ம் ஆண்டு துவக்க விழா மற்றும் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி  நடந்தது.
இதில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவ - மாணவியர், முன்னாள் மாணவர்கள் உட்பட 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மாரத்தான் பேட்டியை முன்னாள் மாணவரும், ஐ.ஆர்.எஸ்., கமிஷனருமான நந்தகுமார் துவக்கி வைத்தார்.
பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணி, அஜய் ஸ்டேடியம், சி.டி.எச்., சாலை, சத்தியமூர்த்தி நகர் சாலை வழியாக, 5.20 கிலோ மீட்டர் துாரம் வந்து, மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
போட்டி முடிவில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.

