sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மார்கழி இசை கச்சேரி - ராமகிருஷ்ண மடம் உருவான கதை விவேக்சங்கர் நாடகத்திற்கு பாராட்டு

/

மார்கழி இசை கச்சேரி - ராமகிருஷ்ண மடம் உருவான கதை விவேக்சங்கர் நாடகத்திற்கு பாராட்டு

மார்கழி இசை கச்சேரி - ராமகிருஷ்ண மடம் உருவான கதை விவேக்சங்கர் நாடகத்திற்கு பாராட்டு

மார்கழி இசை கச்சேரி - ராமகிருஷ்ண மடம் உருவான கதை விவேக்சங்கர் நாடகத்திற்கு பாராட்டு


ADDED : ஜன 06, 2025 01:25 AM

Google News

ADDED : ஜன 06, 2025 01:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டாவில் பண்டிதர் மகனான சசிமகராஜ், தன் 9 வயதில் பெற்றோரை பிரிந்து, கல்வி பயில கோல்கட்டா நகருக்கு செல்கிறார்.

அங்கு, ஆன்மிகம் குறித்த சந்தேகம் எழ, ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்திக்கிறார். உடன் விவேகானந்தர் இருக்கிறார்.

ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்க, மகன் படித்து சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றுவான் என நினைத்த பெற்றோருக்கு ஏமாற்றம்.

ராமகிருஷ்ணருக்கு உடல் நலிவுற்றவோது, அவருக்கு சசிமகராஜ் குரு சேவை செய்கிறார். பேச்சு, மூச்சு, சுவாசம் எல்லாமே, ராமகிருஷ்ணர் என வாழ்கிறார்.

ராமகிருஷ்ணர் இறப்புக்கு பின், விவேகானந்தரை குருவாக நினைத்து, அவர் சொல்படி செயல்படுகிறார் சசிமகராஜ்.

தன்னைவிட ராமகிருஷ்ணர் மீது அதீத பற்று வைத்ததால், தனக்காக வைத்திருந்த ராமகிருஷ்ணர் பெயரை சேர்த்து, ராமகிருஷ்ணானந்தா என, சசிமகராஜ்க்கு பெயர் சூட்டினார் விவேகானந்தர்.

கோல்கட்டா மடத்தை அவரிடம் ஒப்படைத்து, உலகம் முழுதும் ஆன்மிக சுற்றுப்பயணம் செல்கிறார் விவேகானந்தர்.

ராமகிருஷ்ணரின் அஸ்தியுடன் சென்னை வந்த சசிமகராஜ், 100 சதுர அடி இடத்தில் மடத்தை கட்டமைக்கிறார்.

இங்குள்ள சூழலை பார்த்து, ஆன்மிக சேவையை கடந்து, மக்களுக்கான சேவை தேவை என உணர்ந்து, முதல் முறையாக பெண்களுக்கான கல்வி நிறுவனம் அமைக்கிறார்.

பெற்றோரை இழந்தவர்களுக்கு மாணவர் இல்லம், ஆன்மிக பதிப்பகம், விவேகானந்தர் இல்லம் மற்றும் நாடு முழுவதும் ராமகிருஷ்ணர் மடம் துவங்குகிறார்.

தன் 48 வயதில் உடல்நலம் குன்ற, அடுத்த நிலையில் இருப்போரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு கோல்கட்டா செல்கிறார் சசிமகராஜ் எனும் ராமகிருஷ்ணானந்தா.

கோல்கட்டாவில் இருந்து வந்த பின், 39 ஆண்டுகள் கழித்து, தன் தாயை சந்திக்கிறார்.

இதன் பின்னணியில் ஒலிக்கும் பாடல், பார்வையாளர்கள் மனதிலும் பாச போராட்டம் ஊஞ்சலாடுகிறது. இறுதி முடிவு உணர்ந்து, தனக்கு தானே இறப்பு பாடல் எழுதுகிறார். அந்த பாடலுடன் ஒலிக்க, கண்கள் ஈரமாக கரவொலியுடன் வெளியேறினர் பார்வையாளர்கள்.

உண்மை சம்பவத்தை, தத்ரூவமாக நிகழ்த்தி காட்டியுள்ளார் நாடக இயக்குனர் விவேக்சங்கர். திருவான்மியூரில், 'சர்வம் குரு மயம்' எனும் இந்த நாடகத்தில் 'கடவுளை தேடிச் செல்ல வேண்டாம்; கண்களை மூடினால் கடவுள் தெரிவார்; குருவே கடவுள் மக்களே கடவுள்' போன்ற வசனங்கள் கவனம் பெற்றன.

நடித்த 17 நடிகர்கர்களும், அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து உணர்வுப்பூர்வமாக நடித்தனர்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us