/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பயன்பாட்டிற்கு வந்தது மெரினா குடிநீர் மையம்
/
பயன்பாட்டிற்கு வந்தது மெரினா குடிநீர் மையம்
ADDED : அக் 13, 2025 05:01 AM

சென்னை: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, மெரினா அணுகு சாலையில் உள்ள குடிநீர் மையம், பயன்பாட்டிற்கு வந்தது.
சென்னையின் முக்கிய சுற்றுலா தலமான மெரினா கடற்கரைக்கு, உள்ளூர்காரர்கள் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
அவர்களின் வசதிக்காக, நான்கு இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் மையங்கள் செயல்படாததால் பயணியர், வேறு வழியின்றி கடைகளில் காசு கொடுத்து குடிநீரை வாங்கி பருகும் நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்றுமுன்தினம், புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, குடிநீர் மையத்தில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, பயணியர் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.