/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெரினா வந்தவரின் மண்டை உடைப்பு: சிறுவர்கள் கைது
/
மெரினா வந்தவரின் மண்டை உடைப்பு: சிறுவர்கள் கைது
ADDED : பிப் 15, 2025 12:15 AM
சென்னை, அடையாறு, கஸ்துாரிபாய் நகரைச் சேர்ந்தவர் அர்ஜுன் தப்பா, 27; ஹோட்டல் ஊழியர். இவர், 12ம் தேதி மாலை, சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து மெரினாவிற்கு நடந்து சென்றார்.
அப்போது, சிறுவர்கள் இருவர் அவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். பணம் இல்லை என அர்ஜுன் தப்பா மறுத்துள்ளார்.
ஆத்திரமடைந்த சிறுவர்கள், பீர் பாட்டிலால் அவரது தலையில் தாக்கி, போனை பறிக்க முயன்றனர். உடனே, சத்தம் போட்டு பொதுமக்களை அர்ஜுன் தப்பா உதவிக்கு அழைக்கவே, சிறுவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
காயமடைந்த அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு சிகிச்சை பெற்றவர் அண்ணாசதுக்கம் போலீசில் புகார் அளித்தார்.
விசாரணையில், அண்ணாசதுக்கத்தைச் சேர்ந்த 13 மற்றும் 17 வயது சிறுவர்கள் இருவர், வழிப்பறி முயற்சியில் ஈடுபட்டது தெரிந்தது. நேற்று இருவரையும், சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் போலீசார் சேர்த்தனர்.

