/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மசாஜ் சென்டர்' உரிமையாளர் பாலியல் தொழிலில் கைது
/
'மசாஜ் சென்டர்' உரிமையாளர் பாலியல் தொழிலில் கைது
ADDED : மார் 25, 2023 12:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை, ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர் வினோத் அருள்ராஜ், 34. இவர், தி.நகர், பார்த்தசாரதிபுரம், ராஜா பாதர் தெருவில் 'மசாஜ் சென்டர்' நடத்தி வந்தார்.
இங்கு, பாலியல் தொழில் நடப்பதாக, மத்திய குற்றப்பிரிவு, விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பெண் போலீசார் உதவியுடன், அந்த சென்டரில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு பாலியல் தொழிலுக்கு ஈடுபட காக்க வைத்திருந்த, மூன்று பெண்களை மீட்டனர். இவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த, வினோத் அருள்ராஜை கைது செய்தனர்.