ADDED : நவ 05, 2026 06:29 PM
சென்னை: செம்மஞ்சேரி, கண்ணகி நகரில், பாதுகாப்பான மற்றும் மாசில்லா தீபாவளி குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
செம்மஞ்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி, கண்ணகி நகர் அரசு நடுநிலை பள்ளி மாணவ – மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு, மாவட்ட தீ மற்றும் தொழிலக பாதுகாப்பு குழு சார்பில் இன்று (நவ.,5), விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதுகுறித்து, சென்னை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் ஜெயக்குமார் பேசுகையில், ‘‘பட்டாசு வெடிப்பதால் காற்று மற்றும் ஒலி மாசு ஏற்படுகிறது. இவற்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கக்கூடும். எனவே, பாதுகாப்பான, பசுமையான மற்றும் மாசில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும்,’’ என்றார்.
நிகழ்ச்சியில், மாணவர்கள், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன், மாசில்லா தீபாவளி குறித்த உறுதிமொழியை, அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
