/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மதுரா மகோற்சவ கீர்த்தனை விழா கோலாகலம்
/
மதுரா மகோற்சவ கீர்த்தனை விழா கோலாகலம்
ADDED : ஜன 19, 2025 12:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, அக்கரையில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் எனும் இஸ்கான் கோவில் உள்ளது.
இங்கு, மூன்றாவது ஆண்டாக மதுரா மகோற்சவம் கடந்த, 17ல் துவங்கி, இன்று வரை நடத்தப்படுகிறது. தினமும் காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை கீர்த்தனைகள் நடத்தப்பட்டன.
நிகழ்ச்சியில் நேற்று, உலக பிரசித்தி பெற்ற கீர்த்தனை கலைஞர்கள் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.
ஏராளாமான பக்தர்கள் குடும்பத்துடன் கீர்த்தனையில் பங்கேற்று, நடன மற்றும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

