/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.சி.சி., தேசிய மாஸ்டர் ஸ்குவாஷ் * தமிழக வீரர்கள் அசத்தல்
/
எம்.சி.சி., தேசிய மாஸ்டர் ஸ்குவாஷ் * தமிழக வீரர்கள் அசத்தல்
எம்.சி.சி., தேசிய மாஸ்டர் ஸ்குவாஷ் * தமிழக வீரர்கள் அசத்தல்
எம்.சி.சி., தேசிய மாஸ்டர் ஸ்குவாஷ் * தமிழக வீரர்கள் அசத்தல்
ADDED : ஆக 08, 2025 12:14 AM

சென்னை, தேசிய அளவில் நடந்த எம்.சி.சி., மாஸ்டர்ஸ் ஸ்குவாஷ் போட்டியின், 45 வயது மற்றும் 70 வயது பிரிவின் இறுதி போட்டியில், தமிழகத்தின் பாஸ்கர் மற்றும் ராஜூவ்ரெட்டி வெற்றி பெற்றனர்.
இந்திய, தமிழ்நாடு ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் சங்க கூட்டமைப்புகள், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் ஆகியவை இணைந்து, தேசிய எம்.சி.சி., அல்டிஸ் மாஸ்டர்ஸ் ஸ்குவாஸ் சாம்பியன்ஷிப் - 2025' போட்டிகளை, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.சி.சி., கிளப் அரங்கில், ஆக., 2ல் துவங்கி 6ம் தேதி வரை நடத்தின.
இதில், 19 மாநிலங்களை சேர்ந்த, 185 வீரர், வீராங்கனையர், 30 முதல் 70 வரை, ஒன்பது பிரிவுகளின்கீழ் மோதினர்.
இதன் இறுதி போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தது. தமிழகம் சார்பில் ஹரிந்தர்பால்சிங் சந்து, பாஸ்கர் பாலமுருகன், ராஜீவ் ரெட்டி ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில், 45 வயதுக்குட்பட்டோர் பிரிவு இறுதி போட்டியில், தமிழகத்தின் பாஸ்கர் பாலமுருகன், மகாராஷ்டிரா மாநிலத்தின் அமிட்பால் சிங் கோலியை எதிர்க்கொண்டார். பாஸ்கர் பாலமுருகன் 11 - 6, 9 - 11, 9 - 11, 11 - 3 என்ற செட் புள்ளியில் வெற்றிப்பெற்று, அந்த சுற்றின் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
அடுத்து நடந்த, 70 வயதுக்குட்பட்டோர் பிரிவின் இறுதி போட்டியில் தமிழகத்தின் ராஜீவ்ரெட்டி, மேற்கு வங்கத்தின் ஜெய்லால் சிரஷ்தா மோதினர். இதில் சுறுசுறுப்பாக விளையாடிய ராஜீவ் ரெட்டி, 11 - 4, 11 - 4, 11 - 1 என்ற செட் புள்ளியில் வெற்றி பெற்றார்.
***