/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொண்டைக்குள் முட்டை சிக்கி மேஸ்திரி பலி
/
தொண்டைக்குள் முட்டை சிக்கி மேஸ்திரி பலி
ADDED : ஆக 14, 2025 12:22 AM

உத்திரமேரூர் : சாப்பிடும் போது, தொண்டைக்குள் முட்டை சிக்கி கட்டட மேஸ்திரி உயிரிழந்தார்.
காஞ்சிபுரம், உத்திர மேரூர், மலையாங்குளம் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவி, 45; கட்டட மேஸ்திரி.
இவர், நேற்று முன்தினம் இரவு, உணவு சாப்பிடும் போது, அவித்த முட்டையை அப்படியே விழுங்கியதாக கூறப்படுகிறது. அப் போது, அவரின் தொண்டை யில் முட்டை சிக்கியது.
மூச்சுத்திணறலால் தவித்த ரவி, படூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு, நேற்று முன் தினம் இரவு, அவர் உயிர் இழந்தார். உத்திரமேரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.