/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய கிரிக்கெட் தொடர் வரும் 18ல் துவக்கம்
/
தேசிய கிரிக்கெட் தொடர் வரும் 18ல் துவக்கம்
ADDED : ஆக 14, 2025 12:19 AM
சென்னை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், நடப்பாண்டிற்கான அகில இந்திய புச்சி பாபு அழைப்பு கிரிக்கெட் தொடர், சென்னையில் வரும் 18ம் தேதி துவங்க உள்ளது.
இதில், 14 மாநிலங்களைச் சேர்ந்த 16 அணிகள் நான்கு பிரிவுகளாக போட்டியிட உள்ளன. தமிழகம் சார்பில் டி.என்.சி.ஏ., பிரசிடென்ட் - 11 மற்றும் டி.என்.சி.ஏ., - 11 என, இரண்டு அணிகள் பங்கேற்கின்றன.
இதில், டி.என்.சி.ஏ., பிரசிடென்ட் - 11 அணி 'குருப் - ஏ'விலும், டி.என்.சி.ஏ., - 11 அணி குருப் 'சி'யிலும் இடம் பெற்றுள்ளன.
போட்டிகள் 'நாக் - அவுட்' மற்றும் லீக் முறையில் நடக்க உள்ளன. லீக் முடிந்து அரையிறுதி போட்டிக்குத் தகுதி பெறும் அணிகளுக்கான போட்டி, நான்கு நாட்கள் 90 ஓவர்கள் அடிப்படையில் நடக்கின்றன.
இதன் முதல் போட்டியில், டி.என்.சி.ஏ., பிரசிடென்ட் - 11 அணி, ஹெச்.பி.சி.ஏ., அணியையும், இரண்டாவது போட்டியில் டி.என்.சி.ஏ., - 11 அணி, மும்பை அணியையும் எதிர்கொள்கிறது.