/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொழில் போட்டியில் மெக்கானிக்குக்கு கத்திக்குத்து
/
தொழில் போட்டியில் மெக்கானிக்குக்கு கத்திக்குத்து
ADDED : ஜன 24, 2025 12:38 AM
துரைப்பாக்கம், துரைப்பாக்கம், இளங்கோ நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமரன், 49; கார் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார்.
இவரது கடையில் பணிபுரிந்த சந்திரன், 32, என்பவர், சில மாதங்களுக்கு முன் பணியிலிருந்து விலகி, தனியாக கார் மெக்கானிக் கடை நடத்தியுள்ளார்.
ஆனால், எதிர்பார்த்த அளவு வாடிக்கையாளர்கள் வரவில்லை. இதற்கு காரணம், முத்துக்குமரன் தான் என நினைத்துள்ளார்.
இதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று முன்தினம் நடந்த தகராறில், சந்திரன் கத்தியால் முத்துக்குமரனை சரமாரியாக குத்தினார். பலத்த காயமடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து, துரைப்பாக்கம் போலீசார், சந்திரனை நேற்று நேற்று கைது செய்தனர்.

