ADDED : அக் 20, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, வடகிழக்கு பருவமழையால், சென்னையில் பெய்த கனமழையால், 542 இடங்களில் மழைநீர் தேக்கம் ஏற்பட்டது. சில இடங்களில் மழைநீர் வடிய, ஓரிரு நாட்கள் வரை ஆனது. இதனால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், வாந்தி, பேதி உள்ளிட்ட நோய் பாதிப்புகளும் ஏற்பட்டன.
இதன் தீவிர பாதிப்பை தடுக்கும் வகையில், மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில், மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, 15ம் தேதி முதல் நேற்று வரை நடந்த மருத்துவ முகாமில், 58,132 பேர் பயனடைந்துள்ளனர்.
காய்ச்சல், சளி பாதிப்புக்கு ஏற்ப, மருத்துவ முகாம்கள் நடைபெறும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.