ADDED : மார் 30, 2025 12:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, மார்ச் 30-
சென்னை மாநகராட்சி பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள் துறை சார்பில், ஆலந்துார், ஜால் தெருவில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில், 'வரும் முன் காப்போம்' மருத்துவ முகாம், நேற்று நடந்தது.
இந்த முகாமில், பொது மருத்துவம், ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை, காது, மூக்கு, தொண்டை, குழந்தை மருத்துவம், மகப்பேறு, கருப்பை புற்றுநோய், தோல், கண், இருதயம் உள்ளிட்டவற்றுக்கு ஆலோசனை அளிக்கப்பட்டது.
இம்முகாம் துவக்க விழாவில், மண்டல குழு தலைவர் சந்திரன், மண்டல உதவி கமிஷனர் முருகதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.