/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மருத்துவ மையம் எண்ணுாரில் திறப்பு
/
மருத்துவ மையம் எண்ணுாரில் திறப்பு
ADDED : ஜூலை 16, 2025 12:31 AM

சென்னை, எண்ணுார் மக்களின் மருத்துவ வசதிக்காக, கோரமண்டல் உரத்தொழிற்சாலை சார்பில், மருத்துவ மையம் மற்றும் நடமாடும் மருத்துவ ஊர்தி திறக்கப்பட்டுள்ளது.
எண்ணுாரில் உள்ள, 37 கிராம மக்களுக்கு மருத்துவ வசதியை ஏற்படுத்தும் வகையில், கோரமண்டல் உரத் தொழிற்சாலை சார்பில், 'கோரே ஆரோக்யா' என்ற திட்டத்தின் கீழ், உபகரணங்களுடன் கூடிய, மருத்துவ மையம் மற்றும் நடமாடும் மருத்துவ ஊர்தி துவங்கப்பட்டது.
இதை, ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் மற்றும் கோரமண்டல் தொழிற்சாலை நிர்வாக இயக்குநர் சங்கர சுப்பிரமணியன் உள்ளிட்டோர் துவங்கி வைத்தனர்.
''சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ், எண்ணுார் பகுதியில், 8 கோடியில் பல்வேறு பணிகள் செய்யப்படும்,'' என, நிர்வாக இயக்குநர் சங்கர சுப்பிரமணியன் கூறினார்.