/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராஜன் கண் மருத்துவமனையில் இன்று மருத்துவ கருத்தரங்கம்
/
ராஜன் கண் மருத்துவமனையில் இன்று மருத்துவ கருத்தரங்கம்
ராஜன் கண் மருத்துவமனையில் இன்று மருத்துவ கருத்தரங்கம்
ராஜன் கண் மருத்துவமனையில் இன்று மருத்துவ கருத்தரங்கம்
ADDED : ஜன 07, 2024 12:29 AM
சென்னை, சென்னை, ராஜன் கண் மருத்துவமனை 28 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதன் சார்பில், 'அறுவை சிகிச்சை - 2024' என்ற கருத்தரங்கம், தி.நகர் அக்கார்ட் ஹோட்டலில் இன்று நடக்கிறது.
இதில், 360 டிகிரி கோணத்தில் அறுவை சிகிச்சை செய்வது குறித்து விளக்கப்படுகிறது. கருத்தரங்கின் சிறப்பு அம்சமாக, முப்பரிமாண முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்வது குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது. சிக்கலான கண் நோய்களுக்கு செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
குறிப்பாக, கண் மருத்துவத்தின் அடிப்படை முதல், சமீபத்திய முன்னேற்றங்கள் வரை, விவரிக்கப்படுகிறது. இதில், 600க்கும் மேற்பட்ேடார் பங்கேற்கின்றனர்.