ADDED : அக் 26, 2024 03:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை மருத்துவக் கல்லுாரியில் தேசிய மருத்துவ பயிலரங்கம், நேற்று நடந்தது. 10 மாநிலங்களில் இருந்து, 70க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் பயிலும், 2,000 மாணவர்கள் பங்கேற்றனர்.
மருத்துவ துறை சார்ந்த 24 பயிற்சி பட்டறைகள் இடம்பெற்றன. மருத்துவம் சார்ந்த வினாடி - வினா, ஆராய்ச்சி அறிக்கை சமர்ப்பித்தல், பட்டிமன்றம் என, பல போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
நடப்பாண்டில், புதிதாகத் துவங்கப்பட்ட, நாளஞ்சார் அறுவை சிகிச்சை துறை நடத்திய பட்டறையில், டாப்ளர் ஸ்கேன், சி.டி., ஆஞ்சியோகிராம் பரிசோதனைகள் குறித்த விளக்கம் மற்றும் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், கதிர்வீச்சு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு என, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.