ADDED : ஜன 01, 2024 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கிண்டி அடுத்த ஆதம்பாக்கத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், தி.மு.க., சுற்றுச்சூழல் அணி சார்பில், நேற்று, மெகா மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. மூன்று, ஐந்து மற்றும் 10 கி.மீ., என, தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.
அதிகபட்ச துாரமான 10 கி.மீ., போட்டி, ஆதம்பாக்கம் ரயில் நிலையம் துவங்கி, வேளச்சேரி சென்று மீண்டும் ஆதம்பாக்கம் ரயில் நிலையம் வரை நடந்தது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, அமைச்சர் அன்பரசன் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.