/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அப்போலோ மையம் சார்பில் 'மென் இன் பிங்க்' விழிப்புணர்வு
/
அப்போலோ மையம் சார்பில் 'மென் இன் பிங்க்' விழிப்புணர்வு
அப்போலோ மையம் சார்பில் 'மென் இன் பிங்க்' விழிப்புணர்வு
அப்போலோ மையம் சார்பில் 'மென் இன் பிங்க்' விழிப்புணர்வு
ADDED : அக் 20, 2024 12:41 AM

சென்னை,''பெண்கள் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதும், சிகிச்சை பெறுவதும் முக்கியம்'' என, லோக்சபா எம்.பி., கனிமொழி கூறினார்.
அப்போலோ கேன்சர் சென்டர் சார்பில் மார்பக புற்றுநோய் நோய் குறித்த, 'மென் இன் பிங்க்' என்ற தலைப்பில், பெசன்ட் நகரில் நேற்று, நடைபயிற்சி மற்றும் விழிப்புணர்வு நடந்தது. இந்நிகழ்ச்சியை லோக்சபா தி.மு.க., - எம்.பி., கனிமொழி துவக்கி வைத்தார்.
வானகரம் அப்போலோ கேன்சர் சென்டர் அறுவை சிகிச்சை நிபுணர் மதுபிரியா பேசுகையில், ''புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில், ஆண்களின் பங்கு மிகவும் முக்கியம். இந்நோய் பெண்களின் தனிப்பட்ட பிரச்னை இல்லை. சமூகம் சார்ந்த பிரச்னையாக பார்க்க வேண்டும்,'' என்றார்.
தேனாம்பேட்டை அப்போலோ கேன்சர் சென்டர் அறுவை சிகிச்சை நிபுணர் ஆஷாரெட்டி பேசுகையில், 'பெண்கள் தங்கள் நலனை விட குடும்பத்தினர் நலனில் அதிக அக்கறை செலுத்துகின்றனர். மார்பக புற்றுநோய் ஆரம்ப நிலையை கண்டறியும் ஸ்கிரீனிங் சோதனையில் பெண்கள் கவனம் செலுத்துவதில்லை. ஆண்கள் உறுதுணையாக இருந்து, பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார்.
இந்நிகழ்ச்சியில், அப்போலோ மருத்துவமனை எண்டர்பிரைசஸ் லிமிடெட் குரூப் ஆன்காலஜி மற்றும் இன்டர்நேஷனல் துறை இயக்குனர் ஹர்ஷத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.