/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பயணியரிடம் 28 கேள்விகள் கேட்கிறது 'மெட்ரோ' நிர்வாகம் மெட்ரோ லோகோ வைக்கவும்
/
பயணியரிடம் 28 கேள்விகள் கேட்கிறது 'மெட்ரோ' நிர்வாகம் மெட்ரோ லோகோ வைக்கவும்
பயணியரிடம் 28 கேள்விகள் கேட்கிறது 'மெட்ரோ' நிர்வாகம் மெட்ரோ லோகோ வைக்கவும்
பயணியரிடம் 28 கேள்விகள் கேட்கிறது 'மெட்ரோ' நிர்வாகம் மெட்ரோ லோகோ வைக்கவும்
ADDED : ஏப் 27, 2025 02:26 AM
சென்னை:மெட்ரோ ரயில் சேவையை மேம்படுத்துவது குறித்து, 'ஆன்லைன்' வாயிலாக மெட்ரோ நிர்வாகம் சர்வே எடுக்கிறது.
சென்னையில் தற்போது இரு வழித்தடங்களில் 54 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும், மூன்று லட்சம் பேர் பயணிக்கின்றனர். இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், பயணியருக்கான சேவையை மேம்படுத்தவும், பல்வேறு நடவடிக்கைகளை, நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
பயணியருக்கான வசதிகளை மேம்படுத்த, ஆண்டுதோறும் https://chennaimetrorail.org/ என்ற தளத்தில், 'சர்வே' எடுக்கப்படும்.
அந்த வகையில், இந்த ஆண்டில், மொத்தம் 28 கேள்விகள் அடங்கிய 'ஆன்லைன் சர்வே' துவங்கி உள்ளோம். வரும் மே 19ம் தேதி வரை இந்த சர்வே நடத்தப்படும்.
மெட்ரோ ரயில் இயக்கம், துாய்மை, பாதுகாப்பு, சேவையை மேம்படுத்துவது, இடநெருக்கடி மற்றும் புதிய வசதிகள் போன்ற முக்கிய கருத்துகள் ஏற்கப்படும்.
பயணியரின் பணி நிலை, பாலினம், வயது, மெட்ரோவில் பயணிக்கும் நேரம், மெட்ரோ ரயில் நிலையத்திற்கு, வீட்டிற்கும் இடைவெளி துாரம், மெட்ரோ ரயில்கள் இயக்க நேரம் எவ்வாறு உள்ளது போன்றவையும் கேட்கப்பட்டு உள்ளன.
ரயில்கள் தாமதமாக வருகிறதா, போதிய இடவசதி உள்ளதா, உட்பட 28 கேள்விகள் இடம் பெற்றுள்ளன. பயணியரின் கருத்துக்களை புள்ளி விபரங்களாக சேகரித்து, ஆய்வு செய்யப்படும். இதையடுத்து, மெட்ரோ ரயில் சேவையை மேம்படுத்தி, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

