/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கையகப்படுத்திய இடங்களில் வடிகால்வாய்க்கு மாற்றுவழி மண்டல கூட்டத்தில் 'மெட்ரோ' நிர்வாகத்திடம் வலியுறுத்தல்
/
கையகப்படுத்திய இடங்களில் வடிகால்வாய்க்கு மாற்றுவழி மண்டல கூட்டத்தில் 'மெட்ரோ' நிர்வாகத்திடம் வலியுறுத்தல்
கையகப்படுத்திய இடங்களில் வடிகால்வாய்க்கு மாற்றுவழி மண்டல கூட்டத்தில் 'மெட்ரோ' நிர்வாகத்திடம் வலியுறுத்தல்
கையகப்படுத்திய இடங்களில் வடிகால்வாய்க்கு மாற்றுவழி மண்டல கூட்டத்தில் 'மெட்ரோ' நிர்வாகத்திடம் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 13, 2025 12:18 AM

அடையாறு, அடையாறு மண்டலக்குழு கூட்டம், மண்டல அதிகாரி ஆர்டின் முன்னிலையில், மண்டல தலைவர் துரைராஜ் தலைமையில், நேற்று நடந்தது. இதில், மாநகராட்சி, குடிநீர் வாரியம், மெட்ரோ ரயில் நிர்வாகம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
ஆனந்தம், தி.மு.க., 176வது வார்டு: வேளச்சேரியில் உள்ள காலி மனைகளில் குப்பை கொட்டுவதால், கனமழையின் போது தண்ணீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. மனை உரிமையாளர்களிடம் பேசி துாய்மையாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கேபிள் பதிக்க, பள்ளம் எடுத்த சாலையை சீரமைக்காதது ஏன்?
பாஸ்கரன், தி.மு.க., 178வது வார்டு: தரமணியில் மூன்று ஆண்டுகளாக ஏற்பட்ட குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்க செய்த குடிநீர் வாரியத்திற்கு நன்றி. நீதிமன்றம் உத்தரவிட்டும் மாநகராட்சி பெயரில், பட்டா பெயர் மாற்றம் செய்ய தாசில்தார் நடவடிக்கை எடுக்காததால், தரமணியில் திட்ட பணி பாதிக்கிறது.
மோகன்குமார், தி.மு.க., 168வது வார்டு: கிண்டி 'சிட்கோ' வளாகத்தில் வாகனங்களை நிறுத்தும் வசதி இல்லாததால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். நெடுஞ்சாலைத் துறையிடம் இயந்திரம் இல்லாததால், ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள பெரிய வடிகால்வாயை துார்வாரவில்லை.
கதிர்முருகன், அ.தி.மு.க., 170வது வார்டு: கோட்டூர்புரம் பகுதியில், கழிவுநீரை வடிகால்வாயில் விடுவதால் கொசு தொல்லை அதிகரிக்கிறது. காந்தி மண்டபம் சாலையில், பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும்.
சுபாஷினி, காங்கிரஸ், 173வது வார்டு: காந்தி நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கழிப்பறை அமைக்க வேண்டும்.
ராதிகா, தி.மு.க., 174வது வார்டு: சாஸ்திரி நகரில் விடுபட்ட தெருக்களில் வடிகால்வாய் கட்ட வேண்டும். எம்.ஜி., சாலையில் இருந்து, எல்.பி., சாலைக்கு மழைநீர் வடியாததால் அதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
கீதா, தி.மு.க., 171வது வார்டு: சீனிவாசபுரத்தில் பல மாதங்களாக கழிவுநீர் பிரச்னை இருந்தும் தீர்வு காணவில்லை.
கயல்விழி, தி.மு.க., 179வது வார்டு: திருவான்மியூரில் கழிவு நீரேற்று நிலையம் அமைக்க வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விசாலாட்சி, தி.மு.க., 180வது வார்டு: திருவான்மியூரில் பழுதடைந்த மின் பகிர்மான பெட்டிகளை மாற்றாததால், உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதற்கு, அந்தந்த துறை அதிகாரிகள் பதில் கூறினர்.
மண்டலக்குழு தலைவர் துரைராஜ் பேசியதாவது:
அடையாறு, இந்திரா நகர், ஆர்.ஏ.புரம் பகுதியில், மெட்ரோ ரயில் பணிக்காக, இடம் கையகப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்த மழைநீர் வடிகால்வாய்களுக்கு, மாற்று கட்டமைப்புகளை முறையாக வடிவமைக்க வேண்டும் என, பல கவுன்சிலர்கள் கூறினர். இதை மெட்ரோ ரயில் நிர்வாகம், கவனத்தில் கொள்ள வேண்டும். கொசு தொல்லை அதிகமாக இருப்பதால் மழைநீர் வடிகால்வாயில் விடும் கழிவுநீர் இணைப்பை அடைக்க வேண்டும்.
தற்போது துவங்கிய, துவங்க உள்ள வடிகால்வாய், சாலை பணிகளை பருவமழைக்கு முன் முழுமையாக முடிக்க, வார்டு பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவர் அவர் கூறினார்.
தொடர்ந்து, சாலை, வடிகால்வாய், கழிப்பறை உள்ளிட்ட பணிகளுக்காக, 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.