sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 சென்ட்ரல் - ஏர்போர்ட் இடையே மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

/

 சென்ட்ரல் - ஏர்போர்ட் இடையே மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

 சென்ட்ரல் - ஏர்போர்ட் இடையே மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

 சென்ட்ரல் - ஏர்போர்ட் இடையே மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு


ADDED : டிச 31, 2025 03:59 AM

Google News

ADDED : டிச 31, 2025 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தொழில்நுட்ப கோளாறால், சென்ட்ரல் - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை, நேற்று கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஆலந்துார் - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் வழித்தடத்தில், நேற்று காலை 6:00 மணிக்கு, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் நேரடி மெட்ரோ ரயில் சேவை, கடுமையாக பாதிக்கப்பட்டது.

சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக, விமான நிலையம் பயணம் மேற்கொள்ள முடியாமல், பயணியர் தவித்தனர்.

அவர்கள் அனைவரும், ஆலந்துாரில் இறங்கி, நீலவழித்தடத்தில் இயக்கப்படும் விம்கோ நகர் - விமான நிலையம் ரயில் தடத்தில் பயணம் மேற்கொண்டனர்.

இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பச்சை வழித்தடத்தில், சென்ட்ரல் - விமான நிலைய நேரடி ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதை சரி செய்யும் பணிகள் நடக்கின்றன.

பச்சை வழித்தடத்தில், சென்ட்ரல் - பரங்கிமலை சேவையில் எந்தவித பாதிப்பும் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us