/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சான்றிதழ்களை 'டிஜிட்டல்' பதிவு செய்வது அவசியம்
/
சான்றிதழ்களை 'டிஜிட்டல்' பதிவு செய்வது அவசியம்
ADDED : டிச 31, 2025 04:00 AM
சென்னை: ''கற்றல் மட்டும் போதாது; சான்றிதழ்களை டிஜிட்டல் பதிவு செய்வது அவசியம்,'' என, ஹெட்ஸ்டிரீம் டெக்னாலஜிஸ் தலைமை நிர்வாக அதிகாரி பிரமோத் தாமோதரன் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
சான்றிதழ்கள் பொதுவாக உயர்கல்வி அல்லது வேலைவாய்ப்புடன் மட்டுமே தொடர்புப்படுத்திப் பார்க்கப்படுகின்றன. ஆனால், அவற்றின் முக்கியத்துவம், குழந்தைப் பருவத்தில் இருந்தே துவங்குகிறது.
சான்றிதழ்கள் என்பது, ஒரு குழந்தையின் கற்றல் பயண சாதனையின் சான்றாக மட்டுமின்றி, அதன் மனப்பாங்கு, நடத்தை, நம்பிக்கை மற்றும் ஊக்கத்தை வடிவமைக்கும் கருவிகளாக உள்ளன. அவற்றை சரியாக பதிவு செய்வதே, சான்றிதழ்களுக்கான நீடித்த மதிப்பை அளிக்கிறது.
துவக்க மற்றும் ஆரம்பக் கல்வி நிலையில், சான்றிதழ்கள் தொழில் நோக்கமுடைய ஆவணங்களாக இல்லாமல், குழந்தையின் மன வளர்ச்சியை ஆதரிக்கும் உளவியல் கருவிகளாக செயல்படுகின்றன.
அந்த சான்றிதழ்கள் சரியாக பதிவு செய்தால் மட்டுமே, இந்த அங்கீகாரங்களுக்கு அர்த்தம் கிடைக்கும். அவற்றை பாதுகாப்பாக, எளிதில் அணுகக்கூடிய, 'டிஜிட்டல்' சான்றிதழ்களாக பதிவு செய்ய வேண்டும்.
மாணவர்கள், பெற்றோர் என, அனைவரும் தங்கள் கற்றல் பயணத்தை, ஒரே இடத்தில் பாதுகாக்கலாம். வளர்ந்து வரும் காலக்கட்டத்தில், டிஜிட்டல் பதிவு அவசியம். சான்றிதழ்கள் முக்கியம். ஆனால், அவற்றை சரியாக பதிவு செய்தால் மட்டுமே, கற்றல் என்பது நீடித்து வாழும்.
இவ்வாறு பிரமோத் தாமோதரன் கூறினார்.

