/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பால் பாக்கெட் திருட்டு மணலியில் அதிகரிப்பு
/
பால் பாக்கெட் திருட்டு மணலியில் அதிகரிப்பு
ADDED : அக் 27, 2025 03:00 AM

சென்னை: மணலி பகுதியில், பால் பாக்கெட் திருட்டு அதிகரித்துள்ளது.
மணலி, பெரிய மாத்துாரைச் சேர்ந்தவர் முருகராஜ்; பால் முகவர். நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணியளவில், இவரது கடை அருகே சாலையோரம், 'ஆவின்' பால் பாக்கெட் பெட்டிகள் இறக்கி வைக்கப்பட்டிருந்தன.
ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில், பைக்கில் வந்த இரு வாலிபர்கள், 10 லிட்டர் அளவுள்ள பால் பாக்கெட்டுகளை அள்ளிக் கொண்டு, அங்கிருந்து தப்பினர். இந்த காட்சிகள், 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியுள்ளது.
பால் பாக்கெட்டுகள் திருட்டு போகும் சம்பவங்கள் தொடர்கின்றன. இதனால், பால் முகவர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகிறது.
எனவே, ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார், கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என, பால் முகவர்கள் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி வலியுறுத்தியுள்ளார்.

