/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நெய் இருப்பு இல்லாவிட்டால் பால் சப்ளை நிறுத்தம்: ஆவின்
/
நெய் இருப்பு இல்லாவிட்டால் பால் சப்ளை நிறுத்தம்: ஆவின்
நெய் இருப்பு இல்லாவிட்டால் பால் சப்ளை நிறுத்தம்: ஆவின்
நெய் இருப்பு இல்லாவிட்டால் பால் சப்ளை நிறுத்தம்: ஆவின்
ADDED : ஆக 27, 2025 11:46 PM
சென்னை, நெய் உள்ளிட்ட, பால் உப பொருட்களை இருப்பு வைக்காத பாலகங்களுக்கு, பால் சப்ளை நிறுத்தப்படும் என, ஆவின் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
ஆவின் அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில், 34 ஆவின் பாலகங்கள், 1,125 ஆவின் சில்லரை விற்பனை நிலையங்கள் உள்ளன. இந்த நிலையங்களுக்கு வரும் மக்கள், பால் உபபொருட்கள் கேட்கும்போது இல்லை என்று சொல்லக்கூடாது.
ஆவின் சில்லரை விற்பனை கடைகளில், அதிக பால் உப பொருட்கள் கொள்முதல் செய்து வியாபாரம் செய்தால், அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், மிக குறைவான பொருட்களே இருப்பு வைத்துள்ளனர்.
சில கடைகளில் எந்த பொருட்களும் இல்லை; பால் மட்டுமே வியாபாரம் செய்கின்றனர்.
இதே சூழ்நிலை தொடர்ந்தால், பால் சப்ளை நிறுத்தப்படும். தங்களுக்கு கொடுக்கப்பட்ட இலக்கை அடைய முடியாது. எனவே, நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்கள் தேவையான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.