/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விபத்திற்குள்ளான பால் லாரி டிரைவர், கிளீனர் காயம்
/
விபத்திற்குள்ளான பால் லாரி டிரைவர், கிளீனர் காயம்
ADDED : ஜூலை 16, 2025 12:16 AM

பாடி, பால் பாக்கெட் வினியோகம் செய்யும் ஈச்சர் லாரி, விபத்திற்குள்ளானதில் ஓட்டுநரும், கிளீனரும் பலத்த காயமடைந்தனர்.
கொரட்டூர் பால் பண்ணையில் இருந்து, அதிகாலை 4:00 மணி அளவில்பால் பாக்கெட்களை வினியோகம் செய்ய, ஈச்சர் லாரி கிளம்பியது.
அதில், ஓட்டுநராக சதீஷ் என்கிற சுப்பிரமணி, 40, கிளீனராக ஆனந்த், 38, ஆகியோர் இருந்தனர்.
பாடி அடுத்த பார்க் சாலை பகுதியில், பால் பாக்கெட்களை இறக்கி வைத்தப்பின், காலை 7:00 மணியளவில் ஓட்டுநர் சதீஷ், லாரியை இயக்கியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த தபால் நிலையத்தின் சுற்றுச்சுவரில் மோதியது.
இதில் லாரியின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. ஓட்டுநரும் கிளீனரும் லாரியில் சிக்கிக்கொண்டனர். இருவரையும் வெளியே கொண்டுவர அங்கிருந்தவர்கள் எடுத்த முயற்சி, தோல்வியில் முடிந்தது.
பின், ஜெ.ஜெ.நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் இருவரையும் மீட்டனர். இதில், ஓட்டுநர் சதீஷுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கிளீனர் ஆனந்த் லேசான காயங்களுடன் தப்பினார்.
திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.