/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்களிடம் சீண்டல்; பால்காரர் சிக்கினார்
/
பெண்களிடம் சீண்டல்; பால்காரர் சிக்கினார்
ADDED : ஆக 25, 2025 01:34 AM
கோயம்பேடு; கோயம்பேடில், அதிகாலையில் பால் பாக்கெட் போடும்போது பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை, போலீசார் கைது செய்தனர்.
கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், அதிகாலையில் நடந்து சென்றபோது பைக்கில் வந்த மர்ம நபர், தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்திருந்தார்.
இது குறித்து விசாரித்த கோயம்பேடு போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.
இதில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த யுவராஜ், 34, என, தெரியவந்தது. இதையடுத்து, நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், யுவராஜ் அதிகாலையில் கோயம்பேடு, விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில், பால் பாக்கெட் போட செல்லும்போது, தனியாக நடந்து சென்ற பெண்களை குறிவைத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது.
அந்தவகையில், 20க்கும் மேற்பட்ட பெண்களிடம், பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.