/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பேரம்பாக்கம் கூவத்தில் புது ஆற்றுப்பாலம் அமைச்சர் எ.வ.வேலு உறுதி
/
பேரம்பாக்கம் கூவத்தில் புது ஆற்றுப்பாலம் அமைச்சர் எ.வ.வேலு உறுதி
பேரம்பாக்கம் கூவத்தில் புது ஆற்றுப்பாலம் அமைச்சர் எ.வ.வேலு உறுதி
பேரம்பாக்கம் கூவத்தில் புது ஆற்றுப்பாலம் அமைச்சர் எ.வ.வேலு உறுதி
ADDED : ஜன 08, 2025 09:58 PM
சென்னை:''பேரம்பாக்கத்திற்கு இன்று அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து, முதல்வரின் அனுமதி பெற்று கூவம் ஆற்றுபாலம் கட்டி கொடுக்கப்படும்,'' என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்:
தி.மு.க., - ராஜேந்திரன்: பேரம்பாக்கத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம், 'வர்தா' புயலில் அடித்து செல்லப்பட்டது. அதற்கு மாற்றாக மேல்தட்டு பாலம் அமைக்கப்பட்டது. அண்ணா மேம்பாலம் போன்று உயரத்தில் உள்ளதால், அதில் பள்ளி மாணவர்கள், வயதானர்கள் ஏறி செல்ல முடியவில்லை. இதற்காக சொந்த ஏற்பாட்டில் கூவம் ஆற்றில் தரைப்பாலம் அமைத்து கொடுத்தோம். அந்த பாலமும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. பேரம்பாக்கம் நகருக்கு செல்வதற்கு, அந்த பாலத்தைதான் மக்கள் பயன்படுத்த வேண்டும். எனவே, முதல்வரிடம் எடுத்துக்கூறி, அந்த பாலத்தை அமைச்சர் கட்டி தரவேண்டும்.
அமைச்சர் வேலு: தினமும் என்னை சந்திக்கும் எம்.எல்.ஏ.,க்களில் ராஜேந்திரனும் ஒருவர். அவர் கடிதமாக கொடுத்திருந்தால், முன் முயற்சி எடுத்திருப்பேன். இப்போது அவர் கூறியதை கருத்தாக எடுத்துக் கொண்டு, இன்று அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்கிறேன். அரசின் நிதிநிலைக்கு ஏற்ப முதல்வரின் அனுமதி பெற்று அந்த பாலம் கட்டி கொடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

