/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புனரமைத்த பஸ் நிலையம் அமைச்சர் திறப்பு
/
புனரமைத்த பஸ் நிலையம் அமைச்சர் திறப்பு
ADDED : பிப் 15, 2024 12:16 AM

தரமணி, அடையாறு மண்டலம், 175வது வார்டு, வேளச்சேரி, லட்சுமி ஹயக்ரீவா 3வது குறுக்கு தெருவில், மாநகராட்சி இடம் உள்ளது.
இதில், தென்சென்னை எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் தொகுதி மேம்பாட்டு நிதியில், 58 லட்சம் ரூபாயில், பூப்பந்து விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டது.
அதேபோல், 178வது வார்டு, தரமணி பேருந்து நிலையம், 60 லட்சம் ரூபாய் செலவில் நவீனமாக மாற்றப்பட்டது. இரண்டு திட்டங்களையும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், தென்சென்னை எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், வேளச்சேரி தொகுதி எம்.எல்.ஏ., ஹசன் மவுலானா, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், கவுன்சிலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

