/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகள் ஜெட் வேகம்' அமைச்சர் தகவல்
/
'வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகள் ஜெட் வேகம்' அமைச்சர் தகவல்
'வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகள் ஜெட் வேகம்' அமைச்சர் தகவல்
'வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகள் ஜெட் வேகம்' அமைச்சர் தகவல்
ADDED : ஜன 24, 2025 12:17 AM

திருவொற்றியூர்,
திருவொற்றியூர், ராயபுரம், ஆர்.கே., நகர், துறைமுகம், வால்டாக்ஸ் சாலை ஆகிய பகுதிகளில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சி.எம்.டி.ஏ., மேற்கொண்டுள்ள பணிகளை, அமைச்சர் சேகர்பாபு, கூடுதல் தலைமை செயலர் காகர்லா உஷா, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அன்சுல் மிஷ்ரா, சி.இ.ஓ., சிவஞானம், மேயர் பிரியா உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர்.
பின், அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், 252 பணிகள் 6,350 கோடி ரூபாய் செலவில் துவங்கி நடந்து வருகிறது. அப்பணிகளை, வாரத்திற்கு மூன்று நாட்கள் ஆய்வு செய்து வருகிறோம். பணிகள் ஜெட் வேகத்தில் நடக்கின்றன வால்டாக்ஸ் சாலையில், 700 குடியிருப்புகள் கட்டும் பணி, இந்தாண்டு இறுதிக்குள் முடியும்.
சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு செல்லும் பாதை, ஒரு வழிபாதையாக உள்ளது. 3.4 கி.மீ., துாரம் நான்கு வழி பாதையாக அகலப்படுத்தப்பட உள்ளது. இப்பணியும், திருத்தணி கோவிலுக்கு மாற்று மலைப்பாதை பணியும் இந்தாண்டுக்குள் நிறைவுறும்.
பக்தர்கள் வருகை, பல கோவில்கள், 100 சதவீதத்திற்கும் மேலாக உள்ளது. அதன் காரணமாக, பக்தர்களின் தரிசனத்தில் தடை ஏற்படாமல் இருக்க, 19 திருக்கோவில்கள், 1,319 கோடி ரூபாய் செலவில், பெருந்திட்ட வரைவு மேற்கொள்ளப்பட்டு, அந்த பணிகளும் நடக்கின்றன.
இவ்வாறு, அவர் கூறினார்.

