/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காரல் மார்க்ஸ் சிலை அமைச்சர் ஆய்வு
/
காரல் மார்க்ஸ் சிலை அமைச்சர் ஆய்வு
ADDED : நவ 10, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: எழும்பூர் அரசு அருகாட்சியக வளாகத்தில் நிறுவுவதற்கு தயாரிக்கப்படும் காரல் மார்க்ஸ் சிலையை, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று ஆய்வு செய்தார்.
எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில், ஜெர்மனியின் கம்யூனிச தலைவரான காரல் மார்க்ஸ் சிலை நிறுவப்படும் என, முதல்வர் ஸ்டாலின், சட்டசபையில் அறிவித்தார்.
அதன்படி, சென்னை பூந்தமல்லியில், காரல் மார்க்ஸ் சிலை வடிவமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த பணியை, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று ஆய்வு செய்தார். சிலை வடிவமைக்கும் பணியை விரைந்து முடிக்குமாறு, சிற்ப கலைஞருக்கு அவர் ஆலோசனை வழங்கினார்.

