/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சின்னசேக்காடில் பகுதி நேர நுாலகம் அமைச்சர் மகேஷ் உறுதி
/
சின்னசேக்காடில் பகுதி நேர நுாலகம் அமைச்சர் மகேஷ் உறுதி
சின்னசேக்காடில் பகுதி நேர நுாலகம் அமைச்சர் மகேஷ் உறுதி
சின்னசேக்காடில் பகுதி நேர நுாலகம் அமைச்சர் மகேஷ் உறுதி
ADDED : மார் 27, 2025 12:24 AM
சென்னை, மார்ச் 27-
''மணலி சின்னசேக்காடில் பகுதி நேர நுாலகம் அமைக்கும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் உறுதியளித்துள்ளார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
தி.மு.க., - கே.பி.சங்கர்: திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட மணலி, சின்னசேக்காடு உள்ளிட்ட பகுதிகளில், 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அங்கு நான்கு பள்ளிகள் உள்ளன. நுாலகம் அமைத்தால் உழைக்கும் மக்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவியாக இருக்கும்.
அமைச்சர் மகேஷ்: திருவள்ளூர் மாவட்டம் சின்னசேக்காடு கக்கன்புரத்தில் வரையறுக்கப்பட்ட நுாலகம் அமைக்கும் விதிகளின்படி, பகுதி நேர நுாலகம் மட்டுமே அமைக்க முடியும். பொதுமக்கள் பயன்பாடு, உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஏற்ப அது ஊர்புற நுாலகம், கிளை நுாலகம், முழுநேர கிளை நுாலகமாக தரம் உயர்த்தப்படும். இங்கு, 12,000 பேர் வசிக்கின்றனர். இங்கிருந்து 5 கி.மீ., தொலைவில் மணலி கிளை நுாலகமும், ஒரு கி.மீ., தொலைவில் சின்ன சேக்காடு ஊர்புற நுாலகமும் இயங்குகிறது. எம்.எல்.ஏ., கேட்பது நியாயமான கோரிக்கையாக உள்ளது. எனவே, அங்கு மிக விரைவாக நுாலகம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
கே.பி.சங்கர்: எண்ணுார் கத்திவாக்கத்தில் உள்ள பழமைவாய்ந்த நுாலகத்தை மேம்படுத்த வேண்டும் என சட்டசபையில் கோரிக்கை வைத்தேன். எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 1.25 கோடி ரூபாய் செலவில் நுாலக கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. அங்கு 1.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நுாலகத்திற்கான புத்தகங்கள் உள்ளிட்டவை வாங்கப்பட்டு உள்ளன. இந்த நுாலகத்தை துணை முதல்வர் திறந்துவைக்க பள்ளிகல்வி துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அமைச்சர் மகேஷ்: துணை முதல்வர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று, அவரை சந்தித்து தேதி கேட்க வேண்டும். எம்.எல்.ஏ., சட்டசபையில் தேதி கேட்கிறார். பள்ளிகல்வித்துறையின் பல்வேறு நிகழ்வுகளில் துணை முதல்வர் பங்கேற்றுள்ளார். எனவே, இந்த நிகழ்சிக்கும் அவர் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. துணை முதல்வரிடம் நானும் இங்கேயே தேதி கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு விவாதம் நடந்தது.