/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பித்தோரிடம் அமைச்சர் 'நலம்' விசாரிப்பு
/
குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பித்தோரிடம் அமைச்சர் 'நலம்' விசாரிப்பு
குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பித்தோரிடம் அமைச்சர் 'நலம்' விசாரிப்பு
குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பித்தோரிடம் அமைச்சர் 'நலம்' விசாரிப்பு
ADDED : மார் 07, 2024 12:39 AM
சென்னை, தமிழக முதல்வர் ஸ்டாலின், 'நீங்கள் நலமா' என்ற திட்டத்தை, நேற்று துவக்கி வைத்தார். இதையொட்டி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, சென்னை குடிநீர் வாரியத்தில் உள்ள கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து, அரசு திட்டங்கள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார்.
புழுதிவாக்கத்தை சேர்ந்த சார்லஸ், தி.நகரை சேர்ந்த நடராஜன், திருவொற்றியூரை சேர்ந்த ராணி, ரெட்டேரியை சேர்ந்த புவனேஸ்வரி, அம்பத்துாரை சேர்ந்த பிரபாகர் ஆகியோர் குடிநீர், கழிவுநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து இருந்தனர்.
அவர்களிடம், தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமைச்சர் நேரு, குறித்த கால அவகாசத்தில் இணைப்பு வழங்கப்பட்டதா என, கேட்டறிந்தார்.
அதேபோல், திருவல்லிக்கேணியை சேர்ந்த மைதிலி என்பவர், சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவி கேட்டு விண்ணப்பித்து இருந்தார். தாம்பரம் மாநகராட்சியை சேர்ந்த முத்து என்பவர், கட்டட அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார். அவர்கள் விண்ணப்பத்தின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்து, உரிய நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.
கோவை, அன்னுாரை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர், நவீன மின்மயானம் கோரி மனு அனுப்பி இருந்தார்.
இது குறித்தும், சுந்தர்ராஜனிடம் தொலை பேசியில் அமைச்சர் நேரு விசாரித்தார். மின்மயானம் அமைக்கப்பட்டது என, சுந்தர்ராஜன் பதில் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகத்துறை செயலர் கார்த்திகேயன், குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் வினய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

