/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிடப்பில் ரயில்வே நடைமேம்பால பணி: விரைவில் துவக்க அமைச்சர் உத்தரவு
/
கிடப்பில் ரயில்வே நடைமேம்பால பணி: விரைவில் துவக்க அமைச்சர் உத்தரவு
கிடப்பில் ரயில்வே நடைமேம்பால பணி: விரைவில் துவக்க அமைச்சர் உத்தரவு
கிடப்பில் ரயில்வே நடைமேம்பால பணி: விரைவில் துவக்க அமைச்சர் உத்தரவு
UPDATED : டிச 18, 2025 08:54 AM
ADDED : டிச 18, 2025 05:31 AM

ஆலந்துார்: ஆலந்துார் நிதிப்பள்ளி அருகில் இருந்த, எல்.சி., -15 ரயில்வே கேட், 2002ம் ஆண்டு மூடப்பட்டது. பின், 2011ம் ஆண்டு ஐந்து கோடி ரூபாயில் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.
இதுகுறித்து, நம் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியால், அமைச்சர் அன்பரசன் தலைமையில், இத்திட்டத்திற்கான பூமி பூஜை கடந்த ஏப்., மாதம் நடந்தது.
எல்.சி., 15 ரயில்வே கேட், 2.81 கோடி ரூபாயில் அமைகிறது. இதில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ஒரு கோடி ரூபாயும், மீதி நிதியை மாநகராட்சியும் அளிக்கிறது.
இந்த நடைமேம்பாலம், 37 மீட்டர் உயரம், 80 மீட்டர் நீளம் கொண்டது. 21 மீட்டரில் படிக்கட்டுகள் அமைகின்றன. இந்த பணிகளை ஆறு மாதங்களில் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என கூறப்பட்ட நிலையில், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், அங்கு நேரில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அன்பரசன், சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகளுடன் மொபைல் போனின் விவாதித்தார். பின், விரைந்து பணிகளை துவக்க உத்தரவிட்டார்.
பின், அமைச்சர் அன்பரசன் கூறியதாவது:
எல்.சி., 15 ரயில்வே கேட் திட்டத்தில் மாற்றம் செய்ய உள்ளதால், பணியை துவக்குவதில் காலதாமதம் ஏற்பட்டதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. வேளச்சேரி- - பரங்கிமலை மேம்பால ரயில் திட்டம், அடுத்த மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.
ஆலந்துார் மண்டல அலுவலகம், அரசு கலைக் கல்லுாரி கட்டடத்திற்கு விரைவில் பூமி பூஜை போடப்படுகிறது. பழவந்தாங்கல் இணைப்பு சாலை பணி அரசாணை பெற்ற நிலையில் விரைவில் பணிகள் துவங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

