/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கத்தில் நவீன மீன் அங்காடி ஒரு பகுதி செலவை மாநகராட்சி ஏற்க அமைச்சர் யோசனை

ADDED : மார் 26, 2025 11:58 PM
சென்னை, ''செலவின் ஒரு பகுதியை உள்ளாட்சி அமைப்புகள் ஏற்றால், மீன் விற்பனை அங்காடிகள் அமைத்து தரப்படும்,'' என, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
தி.மு.க., - அரவிந்த் ரமேஷ்: நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் பகுதிகளில் மீன் விற்பனை அங்காடிகளை உருவாக்கி தரவேண்டும்.
மீன் வாங்க காசிமேடு, சைதாப்பேட்டை, சிந்தாதிரிபேட்டை, வானகரம் போன்ற, மொத்த மீன் விற்பனை செய்யும் பகுதிகளுக்கு, சில்லறை வியாபாரிகள் செல்கின்றனர்.
பெண்கள் இரவு நேரங்களில் அங்கு சென்று, மீன்களை வாங்கிவர வேண்டிய நிலை உள்ளது. இதைகருத்தில் கொண்டு, ஈ.சிஆர்., - ஓ.எம்.ஆர்., இணைப்பு சாலையின் வடக்கு பகுதியில், நவீன மொத்த மீன் விற்பனை அங்காடி அமைத்து, மீனவ மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி தரவேண்டும்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்: சோழிங்கநல்லுாரை அடுத்த கொட்டிவாக்கத்தில் நவீன மீன் விற்பனை அங்காடி அமைக்கும் பணி, சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மீன் விற்பனை அங்காடி பணி, உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.
மீன் அங்காடி தேவை என்றால், தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகள் அதற்கான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
இந்த விபரத்துடன், அங்காடியில் செய்ய வேண்டிய வசதிகள் குறித்த விவரங்களை, மீன்வளத்துறையிடம் அளிக்க வேண்டும்.
அங்காடி அமைப்பதற்கான ஒருபகுதி செலவை உள்ளாட்சி அமைப்புகள் ஏற்கும்பட்சத்தில், மீதி நிதி ஆதாரங்களை கண்டறிந்து, தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி, மீன் அங்காடி அமைக்க மீன்வளத்துறையால் வசதி ஏற்படுத்தி தரப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
***